புடினுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர்: கட்சி எடுத்துள்ள முடிவு...
*புடின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையிலும் புடினுடனான உறவைக் கைவிட முன்னாள் சேன்ஸலர் முன்வரவில்லை.
*முன்னாள் சேன்ஸலரின் நடவடிக்கைகள் கட்சி விதிகளை மீறவில்லை என கட்சி முடிவு.
ஜேர்மனியின் முன்னாள் சேன்ஸலரான Gerhard Schröder புடினுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள நிலையிலும், அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதில்லை என அவர் சார்ந்த Social Democratic Party (SPD) கட்சி முடிவு செய்துள்ளது.
SPD கட்சியைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள், புடினுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள Schröderஐக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என கோரியிருந்தார்கள்.
ஆனால், கட்சியின் நடுவர் குழு Schröderஇன் நடவடிக்கைகள் கட்சி விதிகளை மீறவில்லை என தீர்ப்பளித்துள்ளது.
ஆனாலும், Schröder கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் என்று கூறியுள்ள நடுவர் குழு, அவர் புடினிடம் இருந்த தன்னைத் தெளிவான வகையில் விலக்கிக்கொள்வது விரும்பத்தக்கதாகும் என்றும் கூறியுள்ளது.
தனிப்பட்ட முறையிலான நட்பு என்பது, தனி நபர் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் நடுவர் குழு தெரிவித்துள்ளது.
78 வயதாகும் Schröder, 1998 முதல் 2005 வரை ஜேர்மன் சேன்ஸலராகவும், 1999 முதல் 2004 வரை SPD கட்சியின் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.