பிரான்சில் கர்ப்பிணியைக் குதறிக் கொன்ற நாய்... கணவன் மீது கொலைக் குற்றச்சாட்டு
பிரான்சில் கர்ப்பிணிப்பெண் ஒருவர், முற்றிலும் நிர்வாணமாக, உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்த வழக்கில் அந்த பெண்ணின் கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Elisa Pilarski (29) என்ற பெண், தன் காதலரான Christophe Lucien Josephஇன் நாயுடன் வாக்கிங் சென்ற நிலையில், வனப்பகுதி ஒன்றில் நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில், நிர்வாணமாக இறந்துகிடந்தார்.
அந்த பகுதியில் வேட்டைக்குச் சென்றவர்களின் வேட்டை நாய்கள்தான் அவரைக் கொன்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, வேட்டையாடுவதற்கு கடும் எதிர்ப்பு உருவானது.
உயிரிழக்கும்போது, Elisa ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததால், இந்த விடயம் பிரான்ஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் DNA சோதனை நடத்தப்பட்டு, Elisaவின் உடலில் உள்ள காயங்களுக்கு எந்த நாய் காரணம் என்பதை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, அந்த சோதனையில், Elisaவின் காயங்களுக்கு காரணம் அவரது காதலரான Christopheஇன் நாயான Curtisதான் என்பது தெரியவந்தது.
Elisaவின் காயங்களில் Curtisஇன் DNA கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அந்த நாயைக் கட்டியிருந்த கயிற்றிலும் Elisaவின் DNA இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, Elisaவின் உயிரிழப்புக்கு Christopheஇன் நாய் காரணமாக இருந்ததால், Christophe மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.