பிரித்தானியாவின் புதிய நடவடிக்கையால் ஏற்பட்ட கடுமையான விளைவு! வேறு வழியில்லாமல் இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல்
பிரித்தானியாவில் பயண விதிமுறைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விமான நிலையங்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாக அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரித்தானியாவில் புதிய வகைகளின் பரவலைக் குறைக்கும் முயற்சியாக, திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் கொரோனாவுக்கு எதிர்மறையான சோதனைமுடிவை காட்டவேண்டும் என்று பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
மேலும், நாட்டுக்குள் வரும் மக்களுக்கு தனிமைப்படுத்தல் உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரேசில் நாட்டில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பிரித்தானியாவின் இந்த கடுமையான நடவடிக்கை வரும் பிப்ரவரி 15-ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த நீண்ட பயணக் கட்டுப்பாட்டின் கீழ் வணிகங்கள் வீழ்ச்சியடையும் என்று விமானத் துறையில் உள்ள குழுக்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், விமான நிலையங்களுக்கு தகுந்த நிதியுதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் விமானத்துறை அமைச்சர் Robert Courts தனது ட்விட்டர் பக்கத்தில் "எங்கள் பயண வழிகளையும் மூடுவது இங்கிலாந்தில் புதிய COVID வகைகள் பரவுவதைத் தடுக்க உதவும், அதே நேரம் இது விமானத் துறையில் ஏற்படுத்தும் தாக்கத்தை நான் அறிவேன், எனவே இதைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக விமான நிலையங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கான எங்கள் திட்டத்தை அறிவிக்கிறேன், அதற்கான நடவடிக்கைகள் இந்த மாதம் திறக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.
இந்த விமான நிலையம் மற்றும் தரைவழி செயல்பாட்டு ஆதரவு திட்டம் விமான நிலையங்களின் செலவுகளைக் குறைக்க உதவும், மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மானியங்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டில் அதன் பயணிகளின் எண்ணிக்கை 73% குறைந்துவிட்டது என்ற அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முதலில் நவம்பரில் அறிவிக்கப்பட்டது, இருப்பினும் அரசாங்கம் தொடக்க தேதியை வழங்கவில்லை.
The Airport and Ground Operations Support Scheme will help airports reduce their costs and we will be aiming to provide grants before the end of this financial year. Further details to follow soon. 2/2 @transportgovuk
— Robert Courts MP (@robertcourts) January 16, 2021