அரசு பேருந்தை நிறுத்தி இருக்கையில் தொழுகை செய்த ஓட்டுநர்.., அமைச்சர் எடுத்த முடிவு
கர்நாடகாவில் தொழுகைக்காக அரசு பேருந்தை நிறுத்திய ஓட்டுநரை விசாரிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்
இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தில், தொழுகை நடத்துவதற்காக அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், இது குறித்து விசாரிக்குமாறு வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், "அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் சில விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கான மதச் சுதந்திரம் உண்டு என்றாலும் அவர்கள் பணியில் இருக்கும் போது கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
பயணிகள் பேருந்தில் பயணிக்கும் போது நடுவில் நிறுத்தியது ஆட்சேபனைக்குரியது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |