கொரோனா பாதித்த இளவரசர் சார்லசை சந்தித்த மகாராணியாரின் நிலை என்ன? உருவாகியுள்ள அச்சம்
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள விடயம் எதிர்பாராத கவலைகளை உருவாக்கி உள்ளது.
காரணம், இளவரசர் சார்லசுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் மகாராணியாரைச் சந்தித்திருக்கிறார்.
தற்போது கொரோனா தொற்று உறுதியாகி, சார்லஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவரை சந்தித்த மகாராணியாரின் நிலை குறித்து அச்சம் உருவாகியுள்ளது.
மேலும், 95 வயதாகும் மகாராணியார் தொடர்ந்து பல நாட்கள் பரிசோதனைகளுக்கு உட்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராணியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிவிக்க அரண்மனை வட்டாரம் மறுத்துவிட்டது. ஆனாலும், அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மட்டும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராணியார் மூன்று முறை தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதால், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலொழிய, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.