முகம் பளபளவென மின்ன வேண்டுமா? தூங்கும் முன் இதை ட்ரை பண்ணுங்க
பெண்களோ, ஆண்களோ இருவரும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைவார்கள்.
இதற்காக அழகு நிலையத்திற்கு சென்று பலவிதமான ராசயன பொருட்களில் முகத்தை அழகுப்படுத்துவார்கள். ஆனால், அப்படி செய்யும்போது அது சில நாட்கள் மட்டுமே நமக்கு பலன் கொடுக்கும், பிறகு பழைய படி முகம் நிறம் மாறிவிடும். கவலை விடுங்கள்.
இயற்கையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தை எப்படி அழகாக மாற்றலாம் என்று பார்ப்போம் -
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். அன்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.
இரவு தூங்கச் செல்லும்போது கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவிவிட்டு தூங்குங்கள். ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதோடு, முகமும் பளிச்சிடும்.
இரவு தூங்கச் செல்லும்போது, வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளவென பொலிவடையும்.
இரவு தூங்கச் செல்லும்போது, வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் முகத்தை மசாஜ் செய்து கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
இரவு தூங்கச் செல்லும் முன், சாதம் வடித்த கஞ்சியை லேசான வெதுவெதுப்புடன் எடுத்து முகம், கைகளில் தேய்த்துக் கொண்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடுங்கள். காலையில் உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் மின்னும்.
இரவில் தூக்கம் கெடுவதால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படும். இதைப் போக்க, இரவு தூங்கச் செல்லும் முன், விளக்கெண்ணெய்யில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கண்களை சுற்றி தடவி படுத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், 10 நாளில் கருவளையம் நீங்கிவிடும்.
இரவு தூங்கச் செல்லும் முன், ஒரு ஸ்பூன் தேனில் 2 சொட்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி உறங்கச் செல்லுங்கள். காலை எழுந்தவுடன் கடலை மாவு குழைத்து முகத்தில் தேய்த்து அரை மணி கழித்து கழுவினால் உங்கள் முகம் பட்டுப்போல் மின்னும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |