சுவிட்சர்லாந்தில் 3,000 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரபல ஹொட்டலுக்கு நேர்ந்த கதி...
சுவிட்சர்லாந்தில், பிரபல ஹொட்டல் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
அந்த ஹொட்டல் பனிச்சறுக்குக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்த ஹொட்டல் ஆகும்.
சுவிட்சர்லாந்தில், கடல் மட்டத்திலிருந்து 3,000 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரபல ஹொட்டல் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
Vaud மாகாணத்தில் அமைந்துள்ள, பனிச்சறுக்குக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்த அந்த ஹொட்டலில், நேற்று முன்தினம் இரவு தீப்பற்றியுள்ளது.
அந்த ஹொட்டல் மிகவும் உயரமான மற்றும் வாகனப்போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் திண்டாடியிருக்கிறார்கள்.
Canton Vaud police
ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவந்துதான் அவர்களால் தீயை அணைக்க முடிந்திருக்கிறது.
தீப்பற்றும்போது ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லையென்றாலும், அந்த ஹொட்டலின் மேல்பகுதி நாசமாகிவிட்டது.
ஹொட்டலில் தீ எப்படி பற்றியது என்பதைக் கண்டறிவதற்காக பொலிசார் விசாரணை துவக்கியுள்ளார்கள்.