புலம்பெயர்ந்தோரின் அறை வாடகையை அநியாயமாக உயர்த்திய கனேடிய நிறுவனம்: புகாரளித்தவர்களுக்கு ஏற்பட்ட கதி
*புலம்பெயர்ந்தோரின் அறை வாடகையை அநியாயமாக உயர்த்தியது கனேடிய நிறுவனம் ஒன்று.
*அதைத் தட்டிக் கேட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மொன்றியலுக்கு வடக்கே உள்ள கனேடிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று, தன்னிடம் வேலை செய்த புலம்பெயர்ந்தோரின் அறை வாடகையை அநியாயமாக உயர்த்தியுள்ளது.
அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களில் 48 பேர் வாடகை உயர்வுக்கு சம்மதிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார்கள்.
அவர்களில் இருவர் கியூபெக் பணித்தல சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் இது குறித்து புகாரளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, கியூபெக் பணித்தல சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, அவர்களுடைய ஊதியத்திலிருந்து அநியாயமாக பிடிக்கப்பட்ட 3,800 டொலர்களை திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டது.
ஒன்றரை மாதம் ஆனதும் அந்த இருவரையும், அவர்களுடன் அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மூவரையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டது அந்த நிறுவனம்.
Charles Contant/CBC
அந்த நிறுவனம், அந்த பணியாளர்கள் தங்களுக்கு பணி வழங்கியவரை அவமதித்துவிட்டதாகவும், தாங்கள் பணியாற்றிய நிறுவனம் தங்களை மோசமாக நடத்தியதாகக் கூறி, அதன் மூலம் பணி அனுமதி பெறுவதற்காகவே அவர்கள் இப்படி செய்துள்ளதாகவும் கூறி அவர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
புதுவாழ்வைத் துவங்கலாம் என்ற நம்பிக்கையில் கனடா வந்த தங்களுக்கும், தங்கள் சொந்த நாட்டிலிருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அந்த நிறுவனம் மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக சம்பந்தப்பட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
தற்போது, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பணியாளர்கள் சார்பில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் உரிமைகளுக்கான அமைப்பான RATTMAQ என்னும் அமைப்பின் இணை நிறுவனரான Michel Pilon, கியூபெக் பணித்தல சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் புகார் பதிவு செய்துள்ளார்.
Charles Contant/CBC