தமிழகத்தில் தீவிரமடையும் மழை.., ஐந்தாம் சுற்று பருவமழை ஆரம்பம்- டெல்டா வெதர்மேன்
தமிழகத்தில் (டிச15) முதல் ஐந்தாம் சுற்று பருவமழை தொடங்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் கூறியதாவது...
''சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இச்சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
அதுவரை தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தற்காலிக பனிப்பொழிவு நிலவும். தமிழகத்தில் நாளை (டிச 14) வரை இரவில் குளிர்ந்த சூழலும், அதிகாலையில் பனிப்பொழிவும் காணப்படும்.
பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும். மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
டெல்டா கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வயல்களில் வடிகால்களைச் சீர் செய்வது, களைகளை அகற்றுவது போன்ற பணிகளைத் துரிதப்படுத்தலாம்.
Representative image
டிச15-ம் தேதி முதல் டிச 20-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஐந்தாம் சுற்று மழை தமிழகத்தில் தீவிரமடையும். குறிப்பாக, கடலோர பகுதிகளில் நல்ல மழை பொழியும்.
டிசம்பர் 4-வது வாரத்தில் 6-ம் சுற்று மழையும் நல்ல மழைப்பொழிவைக் கொடுக்கும். தமிழக விவசாயிகள் அதற்குள் களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு, உரமிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
குளிர்கால பயிர் விதைப்பு பணிகளைத் திட்டமிடும் கடலோரம் மற்றும் கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்ட விவசாயிகள் அடுத்த 2 வாரங்களுக்கு பணிகளை ஒத்தி வைக்கலாம'' என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |