ஏழை நாடுகளுக்காக குரல் கொடுத்த முதல் தலைவன்! பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோனின் சூப்பர் திட்டம்: ஏற்க்குமா ஐரோப்பிய அமெரிக்கா?
ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5% வரை உடனடியாக ஏழை நாடுகளுக்கு அனுப்புமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
தடுப்பூசிகளில் பெரும்பாலானவை இதுவரை அதிக வருமானம் கொண்ட நாடுகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளத் தவறினால் அது உலகளாவிய சமத்துவமின்மயை ஏற்படுத்தும் என மாக்ரோன் தெரிவித்துள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெறவுள்ள உலகத் தலைவர்கள் பங்கேற்கும் G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தடுப்பூசி விடயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்கான தனது திட்டத்தை மாக்ரோன் முன்மொழிந்தார்.
உலகளவிய தடுப்பூசி பகிர்வு திட்டமான Covax-க்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் 4 பில்லியன் டொலர் நிதியளிப்பார் என வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.
அதேபோல் G7 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், Covax திட்டத்திற்கு தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.