முதன்முறையாக இந்தியாவில் அமையும் தனியார் தங்க சுரங்கம்.., இனி தங்கம் விலை குறையுமா?
இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமையவுள்ளது.
தனியார் தங்க சுரங்கம்
இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டாலும் தங்கத்தின் தேவையானது இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.
மேலும், இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் தான் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி என்ற பகுதியில் முதல் தனியார் தங்க சுரங்கம் அமைகிறது.
அங்கேயே தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு பிராசஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கர்நாடாகா மக்களிடையே கருத்தும் கேட்கப்படவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஜியோமைசூர் மற்றும் டெக்கான் கோல்ட்மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தங்கத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக இந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கருத்து கேட்ட பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த அனுமதி கிடைத்தவுடன் 3 மாதங்களுக்குள் தங்கம் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜியோமைசூரின் நிர்வாக இயக்குனரான பிரசாத் கூறுகையில், "இந்த இடத்தில் 30,000 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். இதன் முடிவில் தங்கத்தை வெட்டி எடுத்தால் சரியாக இருக்கும் என்ற முடிவு எடுத்துள்ளோம்" என்றார்.
தற்போது நாம் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு டொலரை தர வேண்டியிருப்பதால் அந்நிய செலாவணியை பாதிக்கிறது.
இதில் சிக்கல் என்னவென்றால் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்பதால் இது நாம் இறக்குமதி செய்யும் 700 டன்னில் சிறிய அளவு தான். இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |