வெற்றி வெற்றி... பிரித்தானிய மீன்பிடி படகை பிரான்ஸ் விடுவித்ததாக வெளியான தகவல்: பிரான்ஸ் தரப்பிலிருந்து வந்துள்ள செய்தி
பிரான்ஸ் பிடித்து வைத்திருந்த மீன்பிடி படகை விடுவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார் பிரித்தானிய சுற்றுச்சூழல் செயலர்.
கடந்த புதன்கிழமை விடுத்த அச்சுறுத்தலிலிருந்து பிரான்ஸ் பின்வாங்கியதை வரவேற்கிறோம் என்று கூறியுள்ள பிரித்தானிய சுற்றுச்சூழல் செயலரான George Eustice, பிரான்ஸ் பிடித்து வைத்திருந்த பிரித்தானிய மீன்பிடி படகான Cornelis Gert Jan விடுவிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால், பிரித்தானிய படகை விடுவித்துவிட்டதாக வெளியான செய்தியை பிரான்ஸ் இன்று மறுத்துள்ளது.
அந்த படகு, இன்னமும் பிரான்சிலுள்ள Normandy துறைமுகத்தில்தான் நிற்கிறது. 125,000 பவுண்டுகள் டெபாசிட் செய்தால் மட்டுமே அந்த படகை விடுவிப்போம் என பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், அது விடுவிக்கப்பட்டுவிட்டதாக Eustice தெரிவித்தது எதனால் என்பது தெரியவில்லை.