குளிர்சாதன பெட்டியை குப்பையில் வீச முயன்ற வெளிநாட்டவர்: துர்நாற்றம் வீசியதால் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம்...
பிரான்சில் வீடு ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் ஃப்ரிட்ஜ் ஒன்றை குப்பைமேட்டில் வீசுவதற்காக தனது கூட்டாளிகளின் உதவியை நாடியுள்ளார்.
அந்த ஃப்ரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அந்த நபர்கள் அதைத் திறக்க, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிரான்சில், ஃப்ரிட்ஜ் ஒன்றை குப்பைமேட்டில் வீசுவதற்காக தனது கூட்டாளிகள் இருவரின் உதவியை நாடியுள்ளார் வெளிநாட்டவர் ஒருவர்.
தெற்கு பிரான்சிலுள்ள Mandelieu-la-Napoule என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த டென்மார்க் நாட்டவரான அந்த நபர், தனது ஃப்ரிட்ஜ் ஒன்றை குப்பைமேட்டில் வீச தன் கூட்டாளிகளிடம் உதவி கேட்டுள்ளார்.
அவர்கள் அந்த ஃப்ரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வருவதை கவனித்து, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்க, தான் தனது நாயைக் கொன்றுவிட்டதாகவும், அதை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.
ஆனால், அவர்கள் இருவரும் ஃப்ரிட்ஜைத் திறக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்த, அதற்குள் ஒர் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனே அவர்கள் பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்கள்.
பொலிசார் வந்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப, அது அந்த நபரின் மனைவி என்பதும், அந்தப் பெண் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
அத்துடன், அந்த நபர் வீட்டை பொலிசார் சோதனை செய்தபோது, அங்கு ஏராளம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் ஒரு நாய்க்குட்டியின் உடல் ஆகியவை இருப்பதைக் கண்டுள்ளனர்.
அவரைக் கைது செய்த பொலிசார் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.