என்னைவிட என் நாய்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது: பிரித்தானிய மகாராணியார் செய்த வேடிக்கை
பிரித்தானிய மகாராணியார் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
தன்னை அடையாளம் தெரியாமல், தன்னிடமே மகாராணியாரைப் பார்த்திருக்கிறீர்களா என கேட்ட அமெரிக்கர்களிடம் அவர் செய்த வேடிக்கை மிகவும் பிரபலம்.
நாய் பிஸ்கட்டை சாப்பிட்ட விருந்தினர்
மகாராணியாருடன் சாப்பிடுவதை பெரும் கௌரவமாக மக்கள் நினைப்பதுண்டு. அந்த வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், அப்படி மகாராணியாருடன் சாப்பிடும்போதும் சில வேடிக்கை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒருமுறை சில விருந்தினர்கள் மகாராணியாரைக் காண வந்திருந்தார்களாம். அப்போது பணியாளர் ஒருவர் ஒரு தட்டில் பிஸ்கட்களைக் கொண்டுவர, விருந்தினர் ஒருவர் அதில் ஒரு பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டிருக்கிறார்.
அதைப் பார்த்துகொண்டேஇருந்த மகாராணியார், அவர் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, பிறகு, நீங்கள் சாப்பிட்டது நாய் பிஸ்கட் என்றாராம். என்ன செய்வதென புரியாமல் அவர் விழித்திருக்கிறார்.
Image: 2011 Tim Graham
என்னைவிட என் நாய்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது
ராஜ குடும்ப சமையல் நிபுணரான Paul Kidd என்பவர், முதன்முறையாக மகாராணியாருக்காக உணவு தயாரித்து பரிமாறியிருக்கிறார்.
தன் கண்ணாடியை அணிந்துகொண்ட மகாராணியார் எனக்கு இன்று என்ன உணவு சமைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டபடி மெனு கார்டை கையில் எடுத்து படித்திருக்கிறார்.
பிறகு மெனு கார்டை கீழே வைத்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றி கீழேவைத்துவிட்டு, அகலமான ஒரு புன்னகையை சிந்தினாராம். ஆஹா, ஏதோ மகாராணியருக்கு பிடித்துவிட்டது போலும் என Paul Kidd நினைக்க, என்னைவிட என் நாய்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்று நினைக்கிறேன் என்று வேடிக்கையாக மகாராணியார் கூற, Paul Kiddக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லையாம். இப்படி பலமுறை வேடிக்கை செய்திருக்கிறாராம் மகாராணியார்.
Image: Max Mumby/Indigo/Getty Images
Image: Getty Images
Image: PA Images/Steve Parsons