பிரித்தானியாவில் ரயில் பாதையில் நடந்த சிறுமி... வேகமாக வந்த ரயில்: அடுத்து நடந்தவை
பிரித்தானியாவில், 15 வயது பெண் ஒருத்தி ரயில் வேகமாக வரும் பாதையில் ரயிலை நோக்கி நடந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. Cambridgeshireஇலுள்ள Manea என்ற இடத்தில், பெயர் வெளியிடப்படாத அந்த சிறுமி ரயில் பாதையில் நடக்க முயல, அவளை அங்கிருந்து அகற்ற முயன்ற அவருடைய உறவினரான ஒரு பெண்ணை அந்த சிறுமி தாக்கியிருக்கிறாள்.
இதற்கிடையில், ரயில் பாதையில் ரயிலை நோக்கி ஒரு சிறுமி நடந்து வருவதைக் கண்ட ரயிலின் சாரதி உடனடியாக பிரேக் பிடிக்க, சிறுமி நிற்கும் இடத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் ரயில் வந்து நின்றிருக்கிறது. தகவலறிந்து வந்த பொலிசார், அந்த சிறுமியை கைது செய்துள்ளார்கள்.
அவள் மீது, அத்துமீறி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நுழைந்தது மற்றும் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், அந்த ரயில் நிறுத்தப்பட்டதால், அதே பாதையில் செல்லும் ரயில்கள் பல ஒரு மணி நேரம் வரை தாமதமானதைத் தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.