இந்த பச்சை இலைச்சாற்றில் இவ்வளவு நன்மைகளா? இருமல் முதல் தலைவலி வரை நோய்களுக்கு நிவாரணம் தருமாம்!
Health info
Amazing health benifits
Coleus aromaticus
Mexican mint
By Balakumar
கற்பூரவள்ளி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும்.
கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை, தண்டு, சாறு மருத்துவ குணம் கொண்டதாகும்.
இது சித்தமருத்துவம் முதல் இன்று வரை பல நோய்களை தீர்க்கும் மருத்துவ மூலிகைச் செடியாக உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது. அதிலும் இதன் இலைச்சாற்றில் பல்வேறு மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
- இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
- இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
- குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
- தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
- இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US