லண்டனில் நடந்த வெறுக்கத்தக்க சம்பவம்! உங்க நாட்டுக்கு போ என மிரட்டிய பயங்கரம்: கமெராவில் பதிவான காட்சி
லண்டனில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் யூத தம்பதியினரை இது எங்கள் நாடு, நீங்கள் உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள் என்று இனரீதியாக கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இனரீதியான தாக்குதல்கள் போன்றவை அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கருப்பினத்தவை தாக்குவதும், அவர்களை மோசமாக பேசுவதும், இதனால் ஏற்படும் கடும் மோதலால் ஒரு சில உயிர்கள் கூட போயிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைநகரான லண்டனில் பயணித்த பயணி ஒருவர் சக பயணிகளான யூத(Jewish) தம்பதியினரை, நீங்கள் உங்கல் நாட்டிற்கு செல்லுங்கள், இந்த நாடு உங்களுக்கு சொந்தமில்லை என்று கத்துகிறார்.
இந்த சம்பவம் தலைநகரின் வடக்கே உள்ள Manor House-ல் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியை அந்த பேருந்தில் இருந்த நபர் எடுத்துள்ளார்.
அந்த யூத தம்பதியினரில் பெண், உங்களை போன்றவர்கள் இருப்பதால், நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறோம் என்று கூற, அதற்கு அந்த நபர், ஆமாம், நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள், இந்த நாட்டை நீங்கள் சொந்தமாக்கவில்லை என்று கத்துகிறார்.
இந்த வீடியோ குறித்து Hackney நகர மேயர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது.
இந்த வீடியோ காட்சிகள் குறித்த ஆதாரங்கள் பொலிசாருக்கு கிடைத்திருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், இந்த சம்பவம் கடந்த 8-ஆம் திகதி மாலை Manor House அருகே பேருந்து சென்ற கொண்டிருந்த போது நடந்துள்ளது.
இந்த இனரீதியான மோசமான சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொலிசார் இதன் ஆரம்ப கட்ட விசாரணையில் இருப்பதாகவும், கூறியுள்ளார்.
Hackney நகரின் பொலிஸ் கண்காணிப்பாளர் ஆண்டி போர்ட் கூறுகையில், நாங்கள் அனைத்து வகையான வெறுப்புக் குற்றங்களையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் ஒரு நபரின் இனம், மதம், பாலியல் நோக்குநிலை, இயலாமை குறித்து பேசுவது தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.