வெள்ளிக்கிழமை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை
சூரிச்சில் எஃப், ஜி மற்றும் ஓ குழுக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை முதல் அளிக்கப்படும் என சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சூரிச் மண்டலத்தில் 11 கொரோனா தடுப்பூசி மையங்கள் கடந்த வாரம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத் துறை செவ்வாயன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை, A முதல் E வரையான குழுக்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடிந்தது; மேலும் மூன்று குழுக்கள் வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
ஆனால், பொது மக்களுக்கு மே முதல் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ குழுவில் 16 மற்றும் 17 வயதுடையவர்கள், முன்னர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் கூட தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்.
அதேப் போன்று நோயாளிகளை பராமரித்து வரும் சுகாதார ஊழியர்களும் (எஃப், ஜி குழுக்கள்) தடுப்பூசி பெற பதிவு செய்யலாம்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் 400,000 தடுப்பூசிகளை வழங்க சூரிச் மண்டல சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இன்றுவரை மொத்தம் 268,404 தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 102,666 பேர்கள் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
மேலும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தடுப்பூசி பெற இன்னும் பதிவு செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது.
ஆனால், எஞ்சிய பொது மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள மே மாதம் வரை காத்திருக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.