லண்டனில் ஒரு பெண்ணுக்காக சண்டையிட்டுக்கொண்ட இருவர்: அகதி ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்
லண்டனில், ஒரு பெண்ணுக்காக நடந்த சண்டையில் ஆப்கன் அகதி ஒருவர் பரிதாபமாக உயிரை இழந்துள்ளார்.
பெண்ணுக்காக நடந்த சண்டை
மேற்கு லண்டனில் ஆப்கன் அகதியான Hazrat Wali (18) என்பவர் தன் தோழியுடன் அமர்ந்திருக்கும்போது, வேறு சில இளைஞர்களும் இளம்பெண்களும் அங்கு வந்துள்ளார்கள்.
அப்போது, Hazratஐயும் அந்தப் பெண்ணையும் பார்த்த ஒரு இளம்பெண், நீங்கள் நல்ல ஜோடி என்று கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டு பொறாமை கொண்ட மற்றொரு 17 வயது இளைஞர், Hazratஐ மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
image - MET POLICE
சட்டென கத்திய உருவிய இளைஞர்
வாய்ச்சண்டை கைகலப்பாக மாற, சட்டென பெரிய கத்தி ஒன்றை உருவிய அந்த 17 வயது இளைஞர், Hazratஇன் விலாவில் கத்தியால் குத்தியிருக்கிறார்.
Hazratஇன் கல்லீரலில் கத்தி பாயவே, கடுமையான இரத்த இழப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார் அவர்.
தான் கோபத்தில் Hazratஐக் கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்துள்ளார் அந்த இளைஞர். என்றாலும் ஒரு பெண்ணுக்காக போட்ட சண்டை, ஒரு உயிரைப் பறித்துவிட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.