கனேடிய நகரம் ஒன்றில் வாக்கிங் சென்றவரின் நாய் கண்டுபிடித்த மனித உடல் பாகம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நகரமொன்றில், வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவரின் நாய், மனித எலும்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
கடந்த வார இறுதியில், Kamloops விமான நிலையம் அருகில் ஒருவர் தனது நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, அவரது நாய் எலும்பு ஒன்றைக் கண்டுபிடிக்க, அது மனித எலும்பு போல இருக்கவே, உடனடியாக அவர் பொலிசாருக்கு அது குறித்து தகவல் அளித்துள்ளார்.
நிபுணர்களுடன் அங்கு விரைந்த பொலிசார், அது மனித எலும்புதான் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், அங்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த விடயமும் கிடைக்காததைத் தொடர்ந்து, பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.