இனிமேல் இப்படியான பிரச்சனைகள் வராது! பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின் மன்னிப்பு கேட்ட ஐசிசி
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டியை காண டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனதற்கு ஐசிசி மன்னிப்பு கோரியுள்ளது.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. ஆனால், டிக்கெட் இன்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட குழப்பத்தால் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலர் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனது.
இந்நிலையில், டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் மைதானத்தில் நுழைய முடியாமல் போனதற்கு ஐசிசி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டிக்கு 16,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டது.
எனினும், டிக்கெட் இன்றி அயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் அதிரடியாக நுழைய முயன்றனர்.
மைதானத்திற்குள் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய துபாய் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு அளித்தனர்.
மேலும், கூடுதல் படைகளை வரவழைத்து கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போட்டியை காண டிக்கெட் வைத்திருந்த மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போன அனைத்து ரசிகர்களிடம் ஐசிசி, பிசிசிஐ மற்றுமு் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோருகிறது.
Afghan crowd is desperate to watch match many are arrested by police they were trying to enter stadium without ticket #afg #pak #PakvsAfg pic.twitter.com/d0bR78vqBA
— Qamber Zaidi (@qamber_official) October 29, 2021
சம்பவம் குறித்து விசாரணை நடத்த எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கோரியுள்ளது.
மேலும், இனிமேல் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஐசிசி பணியாற்றி வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.