2021 ஆண்டின் சிறந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் வீரர்களின் பெயரை அறிவித்தது ஐசிசி!
2021 ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் வீரர்களின் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கௌரவிக்கும்.
அந்த வகையில் 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2021-ம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாமை ஐசிசி தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
பாபர் அசாம் 2021ல் 6 ஒரு நாள் போட்டிகளில் 2 சதத்துடன் 67.50 சராசரியில் 405 ரன்கள் அடித்துள்ளார்.
2021-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேட் ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜோ ரூட் 2021ல் 15 டெஸ்ட் போட்டிகளில் 6 சதத்துடன் 1708 குவித்துள்ளார்.