சுவிட்சர்லாந்தில் மாடியிலிருந்து குதித்து பலியான குடும்பம்: உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியாகின
சுவிஸ் நகரமொன்றில் குடும்பமாக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரெஞ்சுக் குடும்பத்தினரின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை சுவிஸ் நகரமாகிய Montreux நகரத்தில் அமைந்துள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒன்றின் மாடியிலிருந்து ஒரு முழுக் குடும்பமும் குதித்து தற்கொலை செய்துகொண்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர்களைக் குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்தக் குடும்பத்தின் தலைவரான Eric David (40), பிரான்சிலுள்ள Marseille நகரின் செல்வச் செழிப்பான பகுதியில் வளர்ந்தவராம். புகழ் பெற்ற பள்ளியிலும் தொழிற்கல்வி நிலையத்திலும் கல்வி பயின்றுள்ளார் அவர்.
இரட்டைச் சகோதரிகளான Nasrine மற்றும் Narjisse Feraoun (41) ஆகிய இருவரும், பாரீஸிலுள்ள உயர் தர பள்ளி ஒன்றில் படித்தவர்கள். அவர்களில் ஒருவரான, Ericஇன் மனைவி ஒரு பல் மருத்துவர். அவரது சகோதரி ஒரு கண் மருத்துவர்.
அத்துடன், சகோதரிகளான Nasrine மற்றும் Narjisse Feraoun இருவரும், புகழ் பெற்ற அல்ஜீரிய நாவாலாசிரியரான Mouloud Feraoun என்பவரின் பேத்திகளாம். பிரெஞ்சு தத்துவவியலாளரான Albert Camus என்பவரின் நெருங்கிய நண்பரான Mouloud, 1962ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், Eric குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொருவராக மாடியிலிருந்து குதித்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்களை யாரும் தள்ளிவிட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் நடப்பதற்கு முன் அந்த வீட்டிலிருந்து சின்னதாக ஒரு சத்தம் கூட எழும்பவில்லையாம்.
ஒரு பக்கம், அக்கம்பக்கத்தவர்கள் யாருடனும் அதிகம் பேசிக்கொள்ளாத அந்த வீட்டிலுள்ள அந்த 15 வயது பையனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்தே கல்வி கற்பித்தது குறித்து பொலிசார் கேள்வி எழுப்பச் சென்ற போது, Ericஐ பொலிசார் கைது செய்யவந்ததால், அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன், தம்பதியரின் எட்டு வயதான இளைய மகளும் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை.
மாடியிலிருந்து குதித்ததில் உயிர் பிழைத்த ஒரே நபரான, தம்பதியரின் மகனான 15 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில், தற்போது கோமா நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இன்னொரு பக்கமோ, பெருந்தொற்று துவங்கியதுமே, அந்த குடும்பம் சர்ச்சைக்குரிய நம்பிக்கைகள் தொடர்பான விடயங்களில் ஆர்வம் காட்டத்தொடங்கியதாகவும் பொலிசார் தொழில்நுட்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.