கனடாவை உலுக்கிய 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் எதிர்பாராத திருப்பம்...
கனடாவில் சகோதரர்கள் இருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டார்கள்.
கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கனடாவில் தாக்குதல்தாரிகள் இருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியானதுடன் 18 பேர் வரை காயமடைந்தார்கள்.
கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆம், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, Saskatchewanஇல் Damien Sanderson மற்றும் Myles Sanderson என்னும் சகோதரர்கள் இருவர் கத்தியால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிய நிலையில், Saskatchewan, ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபா ஆகிய மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பொலிசார் தாக்குதல்தாரிகளைத் தீவிரமாக தேடிவந்தார்கள்.
RCMP SASKATCHEWAN
இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான Damien Sanderson (31) என்பவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார். ஆனால், அவை அவர் ஏற்படுத்தியவை அல்ல. அதாவது, அவர் தற்கொலை செய்துகொண்டதுபோலத் தெரியவில்லை.
ஆனாலும், Damienஉடைய மரணத்துக்குக் காரணம் அவரது சகோதரரா என்பது குறித்து பொலிசார் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Damienஉடைய சகோதரரான Myles (30) இதுவரை சிக்கவில்லை. அத்துடன், அவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அவர் மருத்துவ உதவியை நாடக்கூடும் என்றும் பொலிசார் பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள்.