பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்... கொல்லப்பட்ட தாய் மகனின் புகைப்படங்கள் வெளியாகின
பிரித்தானியாவில் நேற்று ஒருவர் தன் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Lincolnshireஇலுள்ள Louth என்ற இடத்தில், ஒருவர் தன் மனைவியையும் மகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டுக்கு விரைந்த மருத்துவ உதவிக் குழுவினர், Bethany Vincent (26) என்ற பெண்ணும் அவரது மகனான Darren (9) என்ற சிறுவனும் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
அவர்கள் எவ்வளவு முயன்றும், அந்த இருவரையும் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது. இந்த கோர சம்பவம் தொடர்பாக Bethanyயின் கணவனான Daniel Boulton (29) என்னும் நபரை பொலிசார் தேடி வந்தார்கள்.
அத்துடன், இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது என்றும், சம்பந்தப்பட்ட நபர் அபாயகரமானவர் என்றும் கூறி மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு பொலிசார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், 16 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின், சம்பவம் நடந்த இடத்திலிருந்து அரை மைல் தொலைவிலுள்ள Hallington என்ற இடத்திலுள்ள பண்ணை ஒன்றில் Daniel தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
தப்பியோடிய Daniel, அப்பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை நிறுத்தி, தன்னை ஏற்றிக்கொள்ளுமாறு கூறி காரின் கண்ணாடியில் ஒங்கி ஓங்கி தட்டியுள்ளார். பயந்து போன அந்த பெண் அங்கிருந்து விரைந்து பொலிஸ் வாகனங்கள் நின்ற ஒரு இடத்தில் சென்றுதான் காரை நிறுத்தினாராம்.
திகிலடைந்த நிலையிலும், அக்கம்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களை எச்சரித்து, அங்கிருந்து ஓடச்சொன்ன அந்த பெண், பொலிசாரிடம் சென்று நடந்ததைக் கூறியிருக்கிறார். Hallington என்ற இடத்திலுள்ள பண்ணை ஒன்றில் வைத்து பொலிசார் Danielஐக் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கொல்லப்பட்ட Bethany மற்றும் அவரது மகனான Darrenஇன் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட Danielஐக் காவலில் அடைத்துள்ள பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.