மகாராணியாரின் உணவில் கிடந்த பூச்சி: அவர் எப்படி ரியாக்ட் செய்தாராம் தெரியுமா?
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவகை உணவுகளைத்தான் உண்ணுவாராம். அப்படி அவர் உண்ணும் உணவைக் குறித்த கருத்துக்களைத் தெரியப்படுத்துவதற்காக ஒரு நோட்டுப் புத்தகம் இருக்குமாம்.
மகாராணியாரின் உணவில் கிடந்த பூச்சி
ஒரு நாள், மகாராணியாருக்கு வழங்கப்பட்ட சாலட் ஒன்றில் இறந்த நத்தை ஒன்று கிடந்துள்ளது. வழக்கமாக தனது கருத்துக்களை நோட்டுப்புத்தகம் ஒன்றில் எழுதும் மகாராணியார், அன்று அந்த நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து, அதன்மீது அந்த இறந்த நத்தையை வைத்து, அதை அப்படியே சமையலறைக்குத் திருப்பி அனுப்பினாராம்.
அந்த காகிதத்தில், இது என் சாலடில் கிடந்தது, இதை கொஞ்சம் சாப்பிடமுடியுமா? என்று எழுதப்பட்டிருந்ததாம். அதாவது, மகாராணியான தன் உணவில் பூச்சி கிடந்ததைக் கண்டும், அவர் அதை சமைத்த சமையல்காரரரைத் திட்டமாட்டாராம், இந்த வார்த்தைகள் கூட அந்த சமையல்காரர் மீது கோபத்தைக் காட்டாமல் குறும்பாக எழுதப்பட்டவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |