தற்காப்புக்காக கரடியைக் கொன்ற நபர் மீது பொலிஸ் நடவடிக்கை: பிரான்சில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடயம்
பிரான்சில் தன்னைத் தாக்கிய கரடியிடமிருந்து தப்புவதற்காக அதை சுட்டுக்கொன்ற வேட்டைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Seix என்ற இடத்தில், நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு வேட்டைக்காரர்கள் குழுவை திடீரென ஒரு கரடி தாக்கியுள்ளது. அதன் குட்டிகள் அந்த இடத்தில் இருந்ததால், அந்த பெண் கரடி இந்த வேட்டைக்காரர்களைத் தாக்கியுள்ளது.
அப்படி கரடி தாக்கும்போது, 70 வயது நபர் ஒருவர் கரடியிடம் வகையாக சிக்கிக்கொண்டுள்ளார். அந்தக் கரடி அவரை சுமார் 15 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. கரடியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக அவர் அந்த கரடியைச் சுட, உடனடியாக அது உயிரிழந்துள்ளது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வேட்டைக்காரர்கள் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில், அழிவின் விளிம்பிலிருக்கும் ஒரு உயிரினத்தை அழித்ததாக அரசு வழக்கறிஞர், விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, கரடியால் தாக்கப்பட்டவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கைது சம்பவத்தை Ariége பகுதி வேட்டைக்காரர்கள் கூட்டமைப்பின் தலைவரான Jean-Luc Fernandez என்பவர் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
காயம்பட்டு, கைத்தடி உதவியுடன் நடக்கும் நிலைமைக்கு ஆளாகியிருந்த அந்த 70 வயது வேட்டைக்காரரை, பொலிசார் கைது செய்து காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பொலிஸ் காவலில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ள Jean-Luc Fernandez, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், கிராமப்புற மக்கள் அதை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.