தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம், தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம்
இந்திய இயக்குநர் சுகிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம், இன்று வெளியான நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் பெரும் சர்ச்சையை கிளம்பியது.
இதனை தொடர்ந்து இப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக உள்ளதென இஸ்லாம் மக்கள் திரையரங்குகளின் முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
ஏற்கனவே இந்த படம் தென் தமிழகத்தில் பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படவில்லை. மேலும் கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்படத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
@youtube
இப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கையும் மீறி இப்படம் வெளியானதால், தமிழகத்தின் பல திரையரங்குகளில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான இப்படம் சில திரையரங்குகளில் ஓரிரு காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
திரையிட தடை
இதனை தொடர்ந்து இப்படம் வெளியானதற்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திரையரங்குகளின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தின் போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர்” ஒவ்வொரு தேர்தலின் போதும் இது மாதிரியான படங்களை வெளியிடுவது மோடி அரசுக்கு வழக்கமாகிவிட்டது” என குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளா மக்களின் மத ரீதியான ஒற்றுமையை பிளவு படுத்த அரசு, இது போன்ற படங்களை ஆதரிப்பதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் தொடர் பிரச்சனைகளால், இனி தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி என்ற படம் திரையிட தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.