சகோதரியை காப்பாற்றக்கோரி துபாய் இளவரசி தன் கைப்பட எழுதிய கடிதம் இதுதான்: அதில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா?
துபாய் அரசரால் அடிமையாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தன் சகோதரியை காப்பாற்றக்கோரி, அவரது தங்கை, பிரித்தானிய பொலிசாருக்கு எழுதியுள்ள கடிதத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
துபாய் அரசரான ஷேக் முகம்மது, தனது மகளான ஷம்சாவை (38), அவரது விருப்பத்துக்கு மாறாக தனியறை ஒன்றில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதாக அவரது தங்கையான இளவரசி லத்தீஃபா (34) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சர்ரேயிலுள்ள ஷேக் முகம்மதுவின் எஸ்டேட் ஒன்றிலிருந்து ஒரு நாள் தப்பியோடினார் அவரது மகள்களில் ஒருவரான ஷம்சா.
ஆனால், அவரைத் தேடிப்பிடித்து, மயக்க மருந்து செலுத்தி துபாய்க்கு கொண்டு சென்று தனியறையில் அடைத்தார் ஷேக்.
அது தொடர்பாக கேம்பிரிட்ஜ் பொலிசாருக்கு ஷம்சாவின் தங்கையான இளவரசி லத்தீஃபா எழுதியுள்ள கடிதம் ஒன்றில், வாழ்க்கையில் எதற்குமே சுதந்திரம் இல்லாததால்தான் என் சகோதரி தப்பியோடினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் பிடிபட்டபின் அடிமையாக்கப்பட்டு, என் குடும்பத்தாரால் அடித்து உதைக்கப்படுகிறார்.
(என் தந்தை) ஷம்சாவை மீண்டும் மீண்டும் முகத்தில் குத்துவதையும், தலையில் அடிப்பதையும் நானே என் கண்களால் பார்த்தேன். அவளைக் காப்பாற்ற என்னாலான முயற்சிகளை செய்தேன், ஆனால் என்னால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
21 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட ஷம்சா இப்போது எப்படி இருக்கிறார் என யாருக்கும் தெரியாது.
ஆகவே, அவரது வழக்கில் கவனம் செலுத்துங்கள், அதனால் அவருக்கு விடுதலை கிடைக்கலாம் என்று எழுதியுள்ளார் இளவரசி லத்தீஃபா.
லத்தீஃபாவும் அவரது தந்தையால் கடத்தப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியோ இரகசியமாக இந்த கடிதத்தை ரிஸ்க் எடுத்து பிரித்தானிய பொலிசாருக்கு அவர் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.