கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி: ஆண்களின் கனவுக்கன்னி
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி, 1960ம் ஆண்டுகளின் ஆண்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
பிறப்பு
பொலிஸ் அதிகாரியான பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதியினருக்கு 4வது மகளாக 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் பிறந்தவர் சரோஜா தேவி.
குடும்பத்தில் ஐந்து பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தாயின் அரவணைப்பால் உற்சாகமாக வளர்ந்தார்.
புனித தெரசா பள்ளியில் கல்வி பயின்ற போது, போட்டி ஒன்றில் கலந்து கொண்டதில் கன்னட திரையுலகின் புகழ்பெற்ற ஹொன்னப்ப பாகவதரின் கவனத்தை பெற்றார்.
சினிமா பயணம்
சரோஜா தேவியின் அழகையும், திறமையையும் பார்த்த பாகவதர், ”மகாகவி காளிதாஸ்” என்ற படத்தில் அறிமுகம் செய்தார்.
முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது, தொடர்ந்து தமிழில் சிறு வேடங்களில் நடித்து வந்த சரோஜா தேவிக்கு திருப்புமுனையாக அமைந்தது நாடோடி மன்னன் படம்.
1960களில் மிகச்சிறந்த நடிகையாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
கனவுக்கன்னி
நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம் பலதுறைகளிலும் கைதேர்ந்தவராக திகழ்ந்த சரோஜா தேவியை சினிமாத்துறையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒருநாளில் 30 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தினமும் 18 மணிநேரம் ஓய்வின்றி நடித்தார், எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார்.
திருமணம்
1967ம் ஆண்டு ஜேர்மனியில் பணியாற்றிய ஸ்ரீஹர்ஷாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற முடிவு செய்தார், ஆனாலும் கணவர் ஒத்துழைப்பின்படி மீண்டும் திரையுலகில் பயணம் செய்தார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள், மகள் இந்திரா காந்தி மகன் கௌதம் ராமச்சந்திரன். இந்நிலையில் 1986ம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா மாரடைப்பால் உயிரிழந்தார்.
கணவரின் மரணத்தால் உடைந்து போன சரோஜாதேவிக்கு கண்பார்வை பாதிப்படைந்தது, தொடர் சிகிச்சையின் மூலமும், பிள்ளைகள் மேலிருந்த அன்பினாலும் சகஜ நிலைக்கு திரும்பினார்.
2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படம் தான் இவர் கடைசியாக நடித்தது.
இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த சரோஜா தேவி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |