பிரான்சில் கடையில் காரை மோதி கொள்ளையடித்த நபர்... பொலிசார் துரத்தியதால் யோசிக்காமல் செய்த செயல்
பிரான்ஸ் தலைநகரில் நபர் ஒருவர் காரைக்கொண்டு மோதி ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையடித்தார்.
பொலிசார் துரத்தியதால் நதிக்குள் குதித்தார் அவர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் கண்ணாடியில் மோதி, கடையிலிருந்த விலையுயர்ந்த சுமார் 30 கைப்பைகளைக் கொள்ளையடித்தார் ஒருவர்.
பின்னர் அவர் காரில் தப்பியோட, பொலிசார் அவரைத் துரத்தியுள்ளார்கள்.
அதைக் கண்ட அந்த நபர் காரிலிருந்து இறங்கி Seine நதியில் குதித்துள்ளார். ஆனால், உடனடியாக பொலிசார் நதியில் குதித்து அந்த நபரை பிடித்துக் கரையேற்றி கைது செய்துள்ளார்கள்.
அவரிடமிருந்து, திருடப்பட்ட அத்தனை பொருட்களையும் பொலிசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட கைப்பைகள் ஒவ்வொன்றும் 1,000 யூரோக்கள் முதல் 3,000 யூரோக்கள் வரை விலையுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.