இந்த பூவை அறிந்ததுண்டா? இந்த பூவில் அடங்கியுள்ள மருத்துவம் உங்களுக்கு தெரியுமா?
சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் உறுப்புபோல் தோன்றும் இம்மலர் பெண்களின் கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.
சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.
மலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் பல வித ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பூக்களை ரசிப்பதற்கும், சூடுவதற்கும், அழகுக்காக வீட்டில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் நாம் இவற்றை உபயோகிக்கின்றோம். அரிய வகை பூக்களில் ஒன்றான சங்கு பூவிலும் அத்தகைய மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது.
தலை வலிக்கு
தலை வலி ஏற்படாமல் இருக்க தொடர்ந்து சங்குப்பூ இலையின் சாற்றை குடித்து வரலாம்.இதனால் தலைவலி உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூவின் சாற்றை குடித்து வரலாம்.
வயிற்று பூச்சிகள் அழிய
சங்கு பூச்செடியின் வேரை குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் அழியும். இதனால் குழந்தைகளுக்கு சங்குப் பூ செடி வேரை கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
மூளையின் செயல்பாடு
சங்குப்பூ இலையின் சாற்றை குடித்து வருவதால் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இதனால் மூளையின் செயல்திறனை அதிகரிக்க சங்குப்பூ இலையின் சாற்றை தொடர்ந்து குடித்து வரலாம். மேலும் மூளையின் செயல்பாடு குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூ இலையின் சாற்றை குடித்து வர வேண்டும். இதனால் சங்குப் பூ வை நாம் சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை நோய்க்கு
சங்கு பூ, சர்க்கரையின் அளவை உடலில் கட்டுப்படுத்துமாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் என "காம்பிளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்' என்ற ஆய்வு இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இதயத்தை மேம்படுத்த
மக்கள் அவதிப்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளில் இதய நோயும் முதன்மையான இடத்தில உள்ளது. இவற்றை குணப்படுத்த சங்கு பூ உதவுகிறது. சங்கு பூவின் விதைகள் மற்றும் வேர்களை பயன்படுத்தி, கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் இதய கோளாறுகள் நீங்கும்.
இரைப்பு நோய்
நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.