பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவரசர்கள் ஹரி வில்லியம் சந்திப்பு: ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்...
பிரித்தானிய மன்னர் சார்லசுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரைக் காண ஓடோடி வந்தார் அவரது மகனான இளவரசர் ஹரி.
ஹரி பிரித்தானியாவுக்கு வருவது குறித்து தகவல் வெளியானதுமே, ராஜ குடும்ப நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களிடையே, அவர் தனது அண்ணன் வில்லியமை சந்திப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவரசர்கள் ஹரி வில்லியம் சந்திப்பு
இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் சந்திக்கக்கூடும், குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்கள் சீரடையக்கூடும் என ஒரு தரப்பு எதிர்பார்ப்புடன் காத்திருக்க, ராஜ குடும்ப நிபுணர்கள் பெரும்பாலானோர், ஹரியும் வில்லியமும் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்கள்.
ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்...
கடைசியில், ராஜ குடும்ப நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆம், தந்தையை சந்தித்த ஹரி, அண்ணன் வில்லியமையோ, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ள அண்ணி கேத்தரினையோ சந்திக்கவில்லை.
செவ்வாயன்று பிரித்தானியாவுக்கு வந்த ஹரி, தந்தையை சந்தித்துவிட்டு, நேற்று, அதாவது புதன்கிழமை அமெரிக்கா புறப்பட்டுவிட்டார்.
Ben Stansall/Pool photo via AP, File
இதற்கிடையில், பெரும்பாலான ஊடகங்கள், தந்தையை மட்டும் சந்தித்துவிட்டு வில்லியமைப் பார்க்காமலே புறப்பட்டுவிட்ட ஹரி என செய்திகள் வெளியிட்டுள்ள நிலையில், சில ஊடகங்கள், ஹரி தன் அண்ணனை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் ஏனோ அந்த சந்திப்பு நிகழவில்லை என Hilary Fordwich என்னும் ராஜ குடும்ப நிபுணர் தெரிவித்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |