சுவிஸ் வரலாற்றில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த நாள்
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி துப்பாக்கிதாரி ஒருவர் சுவிஸ் நாடாளுமன்றம் ஒன்றில் பயங்கர தாக்குதல் நடத்தினார்.
14 அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்
அந்த தாக்குதல்தாரி கண்மூடித்தனமாக சுட்டதில் 14 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் அந்த தாகுதல்தாரியும் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த துயர சம்பவம், சுவிட்சர்லாந்தில் பல அடிப்படை மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
யார் அந்த தாக்குதல்தாரி?
இந்த பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தியவர் Friedrich Leibacher (57) என்ற நபர். வீட்டிலேயே தைத்த பொலிஸ் உடை ஒன்றை அணிந்துகொண்ட Friedrich, பல ஆயுதங்களுடன் Zug மாகாண நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இரண்டரை நிமிடத்துக்குள் அவர் 90 முறை துப்பாக்கியால் சுட்டதுடன், வீட்டிலேயே தயாரித்த வெடிகுண்டு ஒன்றையும் வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் மூன்று அரசு அதிகாரிகள், 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், 18 பேர் காயமடைந்தார்கள்.
image - swissinfo
Friedrichக்கு நீண்ட காலமாகவே அதிகாரிகளுடன் சட்டப்பூர்வ பிரச்சினைகள் இருந்துவந்துள்ளன. தன்னை அவர்கள் நியாயமான முறையில் நடத்தவில்லை என அவர் கருதினார்.
இந்த தாக்குதல், சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத்தில் பொலிசார் பாதுகாப்பு முதல், துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் வரை பல அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர காரணமாக அமைந்தது.
அந்த தாக்குதலில் உயிர் தப்பிய சிலரது அனுபவங்கள் முதல் பல விடயங்கள் சுவிஸ் அரசு தொலைக்காட்சியால் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டது. அந்த படத்தை இங்கு காணலாம்.