மாமனார் முன்னே மருமகளை கொடுமை செய்த மாமியார்.. இறுதியில் இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!
ராஜஸ்தானில் வரதட்சணை கேட்டு மாமனார் முன்னே இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகூரில் வசித்து வருபவர் பைருலால். இவருக்கு 18 வயதில் பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலே பிரியாவை வரதட்சணை கேட்டு அவரது மாமியார் மற்றும் மாமனார் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் பிரியா கோவித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் தந்தை இருவரும் பிரியாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் மாமனார், மாமியார் இருவரும் வரதட்சணை கேட்டு மிரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் பிரியாவின் மாமியார், மாமனார் முன் நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் அவமானம் தாங்க முடியாமல் பிரியா தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.