பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கு... குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு
பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில், குற்றவாளியான அப்பெண்ணின் கணவருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிரான்சுக்கு சொந்தமான Corsica தீவில், Bruno Garcia-Cruciani (44) என்பவர் தனது முன்னாள் மனைவியும், தன் இரண்டு பிள்ளைகளின் தாயுமான Julie Douibஐ சுட்டுக்கொன்றார்.
தன்னை Bruno மிரட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் Julie தொடர்ந்திருந்த வழக்கை அப்போதுதான் நீதிமன்றம் முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. ஆகவே, Julieயின் மரணம் பிரான்ஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான தாக்குதலை எதிர்த்து பெருமளவில் பேரணிகள் நடத்தப்பட்டன.
Garcia, தன் முன்னாள் மனைவி இறந்தது ஒரு விபத்து என்று கூறியிருந்தார். ஆனால், அவர் தன் முன்னாள் மனைவி வீட்டுக்குச் சென்று அவரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன், மரண தண்டனை, மற்றும் தாய்லாந்துக்கு சென்று வாழ்வது எப்படி என்பது போன்ற விடயங்களை இணையத்தில்தேடியதற்கான ஆதாரங்கள் சிக்கவே, மனைவி இறந்தது விபத்து என்னும் Garciaவின் வாதத்தை நிராகரித்த நீதிபதி, இது திட்டமிட்ட சதி என்று கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.
Garciaவால் 22 ஆண்டுகள் ஜாமீனில் வெளியே வரமுடியாது என்பதுடன், அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பையன்களையும் அவர் பொறுப்பில் விட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.