பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினர் வீட்டில் தீவைத்த மர்ம நபர்: பொலிசார் வெளியிட்டுள்ள காட்சிகள்
பிரித்தானியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பம் வாழ்ந்துவந்த வீட்டில், மர்ம நபர் ஒருவர் தீவைத்ததில், ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியினர் வீட்டில் தீவைத்த மர்ம நபர்
இங்கிலாந்தின் Wolverhamptonஇல் அமைந்துள்ள ஒரு வீட்டில், சீக்கிய குடும்பம் ஒன்று வாழ்ந்துவரும் நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி, அதிகாலை 1.00 மணியளவில், மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டுக்குத் தீவைத்தார்.

இந்த சம்பவத்தில் அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஆகாஷ்தீப் சிங் (Akashdeep Singh, 26) தீயில் சிக்கி பலியானார். அத்துடன், அவரது உறவினர்களான நான்கு பேர் காயமடைந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தற்போது அந்த மர்ம நபர், சிங் வீட்டுக்கு தீவைக்கும் CCTV கமெரா காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வீட்டின் கண்ணாடி ஜன்னல் ஒன்றை அடித்து நொறுக்கி, அந்த நபர் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசும் காட்சியைக் காணமுடிகிறது. இந்நிலையில், அந்த பெட்ரோல் குண்டு வெடித்ததில் தீ குபீரென்று பற்றியெரிந்துள்ளது.

அந்த காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிசார், இப்படி தீப்பற்றி எரிந்திருக்குமானால், தீவைத்த அந்த நபருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம், அல்லது, அவரது உடையிலாவது தீப்பற்றியிருக்கலாம் என்று கூறியுள்ளதுடன், அப்படி யாரையாவது பொதுமக்கள் கண்டிருந்தால், அது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |