பிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய விதி! விமானத்திலிருந்து-ஹோட்டல் வரை எப்படி என்னென்ன நடக்கும்? தெளிவான தகவல் இதோ
பிரித்தானியாவில் இன்று முதல் 33 சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விதி எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 33 சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முதலில் விமானத்திலிருந்து இறங்குவார்கள்.
பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில், அவர்கள் மற்ற பயணிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்துச் செல்வார்கள்.
இதனையடுத்து, அவர்கள் தங்கள் லக்கேஜ்களை எடுக்க ஒரு குழுவாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விமானநிலையத்திலிருந்து வெளியே அழைத்துச்சென்று பேருந்தில் ஏற்றி வடுவார்கள்.
பேருந்து தனிமைப்படுத்த வேண்டிய ஹோட்டலுக்கு அவர்களை அழைத்து சென்றவிடும். அந்த ஹோட்டலில் அவர்கள் 1,750 பவுண்ட் செலவில் சுமார் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள்.
10 நாட்களுக்கு அவர்கள் ஹோட்டலில் அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.