இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அளிக்க இருக்கும் அடுத்த அதிர்ச்சி: இளவரசர் வில்லியம் கவலை என தகவல்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ் தொடர் தோல்வி என பல ராஜ குடும்ப எழுத்தாளர்களால் கருதப்படுகிறது.
ஆனால், ஹரியின் ராஜ குடும்பம் மீதான தாக்குதல் அத்துடன் முடிந்துவிடவில்லை.
இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அளிக்க இருக்கும் அடுத்த அதிர்ச்சி
காரணம், இன்னும் சில வாரங்களில், அதாவது, 2023 ஜனவரி 10ஆம் திகதி, ஹரியின் புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது. அதில் ராஜ குடும்பத்துக்கு மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை ஹரி வெளியிடுவார் என ராஜ குடும்ப எழுத்தாளரான Katie Nicholl என்பவர் கூறியுள்ளார்.
image: Penguin Random House
புத்தகத்தின் பெயரே பல கதைகள் சொல்லும்
ஹரி தன் புத்தகத்துக்கு Spare என பெயர் வைத்திருக்கிறார். அதாவது, அவசியமான ஒரு பொருள் இல்லாதபோது அதற்கு பதிலாக பயன்படுத்தும் பொருளை Spare என்று கூறுவோம்.
அதே பொருளில், அதாவது தான் ஒரு Spareஆக நடத்தப்பட்டதாக தனது விரக்தியை வெளியிடுவதற்காகத்தான் தனது புத்தகத்திற்கு ஹரி அந்த பெயரை வைத்திருக்கிறார் என்கிறார் Katie Nicholl.
ஏற்கனவே இளவரசர் வில்லியம் மீது ஹரி மேகன் தொடரில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஹரியின் புத்தகம் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வில்லியம் கவலை அடைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images