குழந்தையின் படுக்கைக்குக் கீழே கிடந்த அந்த பொருள்... திடுக்கிட்ட பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இளம்பெற்றோர், தங்கள் இரண்டு வயது குழந்தையின் படுக்கைக்கு கீழே கிடந்த அந்த பொருளைக் கண்டு மிரண்டு போனார்கள்.
Larkfieldஇல் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் வாழும் Bethan Baldwin-Pierce (25) Kayleigh (23) தம்பதிக்கு பாம்பு என்றால் அப்படி ஒரு பயம்.
ஒரு நாள் படிக்கட்டுக்கு கீழே பாதி தின்றுவிட்டு போடப்பட்ட ஒரு எலி கிடப்பதையும், பாம்புத்தோல் ஒன்று கிடப்பதையும் கண்டுள்ளார்கள் அந்த தம்பதியர்.
இருவருக்குமே பாம்பு என்றால் பயம் என்பதால், பாம்பு பிடிக்கும் நிபுணர் ஒருவரை வரவழைத்துள்ளார்கள் அவர்கள்.
அந்த நிபுணர் வந்து வீட்டை சோதனையிட்டதில், தம்பதியின் இரண்டு வயது மகனான Harvey படுக்கும் படுக்கையின் கீழ் மற்றொரு பாம்புத்தோல் கிடப்பதைக் கண்டறிய, திகிலின் உச்சத்துக்கே போய்விட்டனர் தம்பதியர்.
இனி மகனை அந்த கட்டிலில் படுக்கவைப்பதில்லை என அப்போதே முடிவு செய்துவிட்டனர் Bethanம் Kayleighயும்.
ஆனால், அவர்களது பயத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில், பாம்பு எதுவும் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை.
பாம்பைப் பிடித்திருந்தாலாவது கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்கலாம். இதற்கிடையில், அந்த பாம்பு பிடிக்கும் நிபுணர் அவர்களுக்கு ஒரு ஆலோசனையை மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அறையின் ஓரங்களில் மாவைக் கொட்டி வைத்துவிட்டால், பாம்பு வந்தால், அது ஊர்ந்து செல்லும் தடத்தை வைத்து பாம்பை பிடித்துவிடலாம் என கூறிச் சென்றுள்ளார் அவர்.
தற்போது, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் யாராவது பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் இருந்தால், தங்கள் பாம்பு தங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள் Bethanம் Kayleighயும்.

