ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவுள்ள வயதான கிரிக்கெட் வீரர் இவர்தான்! அவரின் அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் 2021 ஏலத்தில் 42 வயதான இடக்கை சுழற்பந்துவீச்சாளர் நயன் தோஷி இடம் பெற்றுள்ள நிலையில் அவர் தான் ஏலத்தில் இடம்பெற்றுள்ள வயதான வீரர் ஆவார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த வாரம், 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக முதல்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது இறுதிப் பட்டியலாக 292 பேர் ஏலத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் அதிக வயதுடைய வீரராக 42 வயதான நயன் தோஷி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷியின் மகனாவார்.
இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள நயன் தோஷி 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் ஏலத்தில் இவருக்கு அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
