உலகிலேயே மரணம் இல்லாத ஒரே உயிரினம்.., எது தெரியுமா..?
உலகில் ஜெல்லி மீன்கால் மட்டுமே கிட்டத்தட்ட அழியாதது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நேஷனல் ஜியோகிராஃபிக் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஜெல்லிமீனின் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அவை உடனடியாக பாலிப் நிலைக்கு சென்றுவிடும்.
பாலிப் நிலையில் ஜெல்லிமீனைச் சுற்றி ஒரு குழகுழப்பான சவ்வு உருவாகிறது. இந்த பாலிப்கள் மூன்று நாட்களுக்கு இதே நிலையில் இருக்குமாம்.
இந்த நிலையில் ஜெல்லிமீன் உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதிய செல்களாக மாற்றி முதுமையை முற்றிலும் குறைக்கிறது.
திரும்ப திரும்ப இப்படிச் செய்வதன் மூலம், அவை வயதாவதை தடுக்கின்றனவாம். இதனால் இந்த உயிரினம் இயற்கையாக மரணமடைவதில்லையாம்.
இந்த ஜெல்லிமீன்கள் முதுமையினால் ஒருபோதும் இறக்காது.
அதேநேரம் இந்த வகை ஜெல்லிமீன்களை சுறாக்கள், வாள்மீன்கள், கடல் ஆமைகள் வேட்டையாடி உண்ணும். எனவே வேட்டையாடப்படுதல், நோய் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் இறக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |