இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையத்தை இயக்கும் நபர்.., ரூ.31554 கோடி மதிப்பு சொத்துக்கு சொந்தக்காரர்
ரூ.31554 கோடி மதிப்பு சொத்துக்கு சொந்தக்காரர் ஒருவர் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையத்தை இயக்குகிறார்.
இந்திய நபர்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜிஎம் ராவ் (GM Rao), உலகளாவிய உள்கட்டமைப்பு நிறுவனமான ஜிஎம்ஆர் குழுமத்தை (GMR Group) நடத்துகிறார்.
இவர் ஒரு விமான நிலைய அதிபர் மற்றும் பட்டியலிடப்பட்ட விமான நிலைய ஆபரேட்டர் GMR Airports Ltd-யைக் கட்டுப்படுத்துகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை (Indira Gandhi International Airport) நடத்துகிறார். இது GMR விமான நிலையங்களின் துணை நிறுவனமான டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) ஆல் இயக்கப்படுகிறது. இதனை தவிர, அவரது நிறுவனம் ஹைதராபாத் மற்றும் கோவா விமான நிலையங்களையும் இயக்குகிறது.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிஎம் ராவின் (GM Rao) முழுப் பெயர் கிராந்தி மல்லிகார்ஜுன ராவ். இவர் GMR குழுமத்தின் நிறுவனர் தலைவர் ஆவார்.
ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் ராவ் ஒரு காகித ஆலையில் shift engineer ஆக சேர்ந்தார், பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொதுப்பணித் துறையில் junior engineer ஆக சேர்ந்தார்.
Forbes பத்திரிகையின்படி இவரது நிகர மதிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 31554 கோடி) ஆகும். ஆகஸ்ட் 14 ஆம் திகதி நிலவரப்படி ஜிஎம்ஆர் விமான நிலையங்களின் சந்தை மதிப்பு ரூ. 95747 கோடி ஆகும்.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட் அணியான டெல்லி கேபிடல்ஸில் 50 சதவீத பங்குகளையும் வைத்திருக்கிறார் ஜிஎம் ராவ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |