எல்லைக்கோட்டின் அருகே நின்றிருந்த தொகுப்பாளினி மீது வேகமாக மோதிய வீரர்! பின்னர் அவர் கூறிய விடயம்..வைரல் வீடியோ
தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் போட்டி ஒன்றில், தொகுப்பாளினியின் கால்களில் வீரர் மோதிய வீடியோ வைரலாகியுள்ளது.
சன்ரைசர்ஸ் அணி வெற்றி
கடந்த 18ஆம் திகதி நடந்த போட்டியில் Sunrisers Eastern Cape மற்றும் MI Cape Town அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, யான்சென் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி சென்றது.
தொகுப்பாளினி மீது மோதிய வீரர்
அப்போது அதனை தடுக்க MI Cape Town வீரர்கள் இருவர் வேகமாக ஓடினர். எல்லைக் கோட்டின் அருகே செல்லும்போது வீரர் ஒருவர் டைவ் அடித்து சென்று அங்கிருந்த தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸின் கால்களில் வேகமாக மோதினார்.
"This is coming straight for us.." ?@ZAbbasOfficial, you good? ?@CapeTownCityFC your manager somehow avoided the contact! pic.twitter.com/32YPcfLCMf
— SuperSport ? (@SuperSportTV) January 18, 2023
இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். எனினும் பின்னர் அவர் நாங்க நல்லா இருக்கிறோம், எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சிரித்தபடி காமெராவைப் பார்த்து கூறினார்.
இதுதொடர்பான வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.