பெரும்பான்மை இழந்ததால் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை...
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இழந்ததால், ஆட்சியமைப்பதற்காக அரசியல் எதிரிகளை நாடவேண்டிய பரிதாப நிலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு ஏற்பட்டுள்ளது.
20 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார் இமானுவல் மேக்ரான்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலிலோ அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெறத் தவறிவிட்டது. ஆகவே, வேறு வழியில்லாமல், ஆட்சி அமைப்பதற்காக தனது அரசியல் எதிரிகளின் உதவியை நாடவேண்டிய நிலை மேக்ரானுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மேக்ரானின் அரசியல் எதிரிகள் ஆறு பேர் மேக்ரானை அவரது Elysée மாளிகையில் சந்திக்க இருக்கிறார்கள்.
அதேபோல், நாளை புதன்கிழமை, மேலும் சில கட்சியினர் மேக்ரானை சந்தித்துப் பேச இருக்கிறார்கள்.
இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை இன்றி மாற்பட்டக் கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேக்ரான் ஆட்சி அமைக்கும் நிலையில், அது பல விடயங்களுக்கு சமரசம் செய்துகொள்ளும், பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும் இடையூறாக அமையும் ஒரு ஆட்சியாகத்தான் இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.