இளவரசி டயானாவை கைது செய்த பொலிசார்... இதுவரை வெளிவராத ஒரு புதிய தகவல்
பிரித்தானிய இளவரசி டயானா ஒருமுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் வேடமிட்ட டயானாவும் சாராவும்
1986ஆம் ஆண்டு, பார்ட்டி ஒன்றிற்காக இளவரசி டயானாவும் இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் பொலிஸ் வேடம் அணிந்துகொண்டார்களாம்.
Credit: Getty
பொலிஸ் வேடத்தில் இரவு விடுதி ஒன்றிற்கு இருவரும் செல்ல, மதுபானம் பரிமாறுபவர் வந்து, மன்னிக்கவேண்டும் இங்கு உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி, நாங்கள் பொலிசாருக்கு மதுபானம் பரிமாறமாட்டோம் என்றாராம்.
குறும்புக்கார பெண்களான இருவரும் பொலிஸ் வேடமிட்டு செய்த அலப்பறையைக் கண்ட உண்மையான பொலிசார் டயானாவையும் சாராவையும் கைது செய்தார்களாம்.
Credit: Getty
பின்னர், அவர்கள் ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்பது தெரியவரவே, அதிகாரிகள் உடனடியாக அவர்களை விட்டுவிட்டார்களாம்.
ஒரே குடும்பத்திலுள்ள சகோதரர்களைத் திருமணம் செய்த டயானா, சாரா இருவருமே, 1996ஆம் ஆண்டு, தத்தம் கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Credit: Getty - Contributor

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.