இளவரசர் என் காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்: பாடகி ஒருவர் குற்றச்சாட்டு
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் எனது காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார் என்கிறார் பிரபல பாடகி ஒருவர்.
இளவரசர் சார்லசின் 30 ஆவது பிறந்தநாளின்போது, அவருடன் ஆடிப்பாடினார் Sheila Ferguson. அப்போதே இருவருக்கும் இடையில் ஒரு நட்பு உருவாகிவிட்டதாம். இப்போதும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்களாம்.
ஆனால், Sheilaவுக்கு இளவரசர் சார்லஸ் மீது ஒரு கோபம். அவரால் தனது காதல் வாழ்க்கை நாசமாகிவிட்டது என்கிறார் Sheila.
என்னை யாருமே காதலிக்கவில்லை என்று கூறும் Sheila, ஒரு முறை நடன விடுதி ஒன்றில் ஒரு ஆணிடம் சென்று என்னுடன் நடனமாட விரும்புகிறீர்களா என்று கேட்டாராம். உடனே அந்த நபர், என்னால் உங்களுடன் நடனம் ஆட முடியாது, நீங்கள்தான் இளவரசர் சார்லசுக்கு பிடித்த பெண்ணாயிற்றே என்று கூறிவிட்டாராம்.
இப்படியே, இளவரசர் சார்லஸின் தோழி என்பதால், எந்த ஆணும் தன்னுடன் பழக மறுப்பதாக தெரிவிக்கிறார் Sheila.
Sheilaவுக்கும் இளவரசர் சார்லசுக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் வெளியாகினாலும், தனக்கும் அவருக்கும் இடையில் எப்போதுமே காதல் இருந்ததில்லை என்கிறார் Sheila.