குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த இளவரசி! பிரித்தானியா மகாராணிக்கு 10-வது கொள்ளுப் பேர குழந்தை
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபத்தின் மகள் வழிப் பேத்தியும், இளவரசியுமான சாரா டிண்டாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மகாராணிக்கு 10-வது கொள்ளு பேரக் குழந்தை பிறந்துள்ளது. மகாராணி எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என பெயரிட்டனர்.
இது இளவரசி சாரா டின்டால் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டின்டால் தம்பதியின் 3-வது குழந்தையாகும். ஏற்கனவே இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இளவரசி சாரா டின்டால் அரண்மனையின் குளியலறையில் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் குளியல் அறையிலேயே அவர் குழந்தை பெற்றெடுத்ததாகவும் மைக் டின்டால் கூறினார்.
லூகாஸ் பிலிப் டின்டால், பிரித்தானியா மகாராணி இராண்டம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

