சரியான நேரம் பார்த்து ஹரி மேகனை பழிக்குப் பழி வாங்கிய இளவரசி
பிரித்தானிய ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தெரிந்தும் தெரியாமலும் ராஜ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு எரிச்சலூட்டிவந்ததை உலகமே வேடிக்கை பார்த்தது.
அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இளவரசி யூஜீனி... ஆம், இளவரசி யூஜீனியின் திருமணத்தன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு, மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திசை திருப்பிக்கொண்டார் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்.
இந்த சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக யூஜீனியின் தாயான சாரா ஃபெர்குசன் அந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்திருந்தார்.
அன்று, தன் கணவரான இளவரசர் ஹரிக்கு கூட முன்கூட்டியே சொல்லாமல், திடீரென தான் கர்ப்பமாக இருப்பதைக் கூறி அவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார் மேகன். ஹரி, தன் உறவு முறை சகோதரிகளான யூஜீனி மற்றும் அவரது சகோதரி பீட்ரைஸுடன் நெருக்கமானவர் என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படியிருக்கும்போது யூஜீனியின் திருமணத்தன்று மேகன் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்க ஹரி உட்பட ராஜ குடும்ப உறுப்பினர்கள் பலரும் தர்மசங்கடமாக உணரவேண்டியதாயிற்று.
இந்நிலையில், இன்று, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார் இளவரசி யூஜீனியின் சகோதரியான இளவரசி பீட்ரைஸ். இதில் விசேஷம் என்னவென்றால், இன்று இளவரசர் ஹரி மேகனின் மூன்றாவது ஆண்டு திருமண நாள் ஆகும்.
எப்படி தன் சகோதரியின் திருமணத்தன்று மேகன் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி மக்கள் கவனத்தை மேகன் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டாரோ, அதேபோல, இளவரசி பீட்ரைஸ், இளவரசர் ஹரி மேகனின் திருமண நாள் ஆண்டு விழா அன்று, தான் கர்ப்பமாக இருப்பதை வெளியிட்டு பழிக்குப் பழி வாங்கியுள்ளார்.
பிரித்தானிய மகாராணியார், இளவரசி பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் Edo Mapelli Mozzi மற்றும் குடும்பத்தாருக்கு வாழ்த்துச் சொல்லியுள்ள நிலையில், இளவரசர் ஹரியின் திருமண ஆண்டு விழாவுக்கு வாழ்த்துச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.