பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்கு, பொதுமக்கள் அஞ்சலி எப்போது? விரிவான தகவல்
ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் வைத்து காலமானார்.
ராணியாரின் பூத உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்
10வது நாள், அரசு முறைப்படி இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் இன்று பிற்பகல், ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் வைத்து காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
@afp
ராணியாரின் மறைவை உரிய முறைப்படி பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையின் ஊடாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரச குடும்பத்து ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியாரின் பூத உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் ஸ்கொட்லாந்தில் இருந்து ரயில் மூலம் ராணியாரின் உடல் லண்டனுக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஸ்கொட்லாந்தில் இருந்து ராணியாரின் உடல் லண்டனுக்கு கொண்டுவரும் நடவடிக்கைக்கு UNICORN என பெயரிட்டுள்ளனர்.
உரிய வேளையில் ரயில் சேவை பயன்பாட்டிற்கு இல்லை என்றால் மட்டுமே விமான சேவையை பயன்படுத்த உள்ளனர். ராணியாரின் மறைவுக்கு பின்னர் ஐந்தாவது நாள் அவரது சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு மாற்றப்படும்.
@getty
அத்துடன் முன்னெடுக்கப்படும் இறுதி ஊர்வலமானது பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தொடங்கும், இந்த ஊர்வலம், லண்டன் வழியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கொண்டு செல்லப்படும்.
வெஸ்ட்மின்ஸ்டருக்கு ராணியாரின் உடல் வந்தவுடன், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மத வழிபாடு ஒன்று இருக்கும். இதனையடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும், இந்த மூன்று நாளும் மக்கள் நாளுக்கு 23 மணி நேரமும் அஞ்சலி செலுத்தலாம்.
ராணியார் மறைந்ததன் 10வது நாள், அரசு முறைப்படி இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும். தொடர்ந்து, உத்தியோகபூர்வ சடங்குகளுக்குப் பிறகு, சவப்பெட்டி லண்டனில் இருந்து விண்ட்சர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், மேலும் இருபுறமும் ஊர்வலங்கள் நடைபெறும்.
@getty
விண்ட்சர் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளுக்கு பின்னர், அரச குடும்பத்து உறுப்பினர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக கல்லறையில் ராணியாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும்.